×
Saravana Stores

மாசிமக திருவிழாவையொட்டி திருமானூரில் ஜல்லிக்கட்டு : காளைகள் முட்டி 4 பேர் காயம்

அரியலூர்: மாசிமகத்தை முன்னிட்டு திருமானூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அரியலூர் மாவட்டம், திருமானூரில், மாசிமகப் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு  நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு அரசின் அனுமதி பெற்று திருமானூரில் நடராஜ வீதியில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. முன்னதாக காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதர் கோயிலிலிருந்து சீர் வரிசை எடுத்துவரப்பட்டு வாடிவாசலிருந்து காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது.

ஜல்லிகட்டில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டத்திலிருந்து 500 காளைகள் பங்கு பெற்றன. 200 ஜல்லிகட்டு வீரர்கள் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர். காளைகளை அடக்கியவர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, பேன், வெள்ளிகாசு, சில்வா ஆண்ட, சேர், ஷோபா, சைக்கிள் போன்ற பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஏடிஎஸ்பி பெரியய்யா, ஆர்டிஓ சத்தியநாரயணன், டிஎஸ்பி மோகன்தாஸ் உள்ளிட்டவர்கள் மேற்பார்வையிட்டனர்.

மேலும், இந்நிகழ்ச்சியை காண சுற்றுப்புற பகுதிகளிலிருந்து 5000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த ஐல்லிகட்டில்  காளைகளை அடக்கும் போது  மாடுபிடி வீரர்கள் தமிழரசன்(25) கோவிலூர், விஜய்(24), வாடிப்பட்டி, மணிகண்டன்(23) அருங்கால், மணிகண்டன்(40) திருமானூர் ஆகியோர் காயம் அடைந்தனர். இதில் மணிகண்டன்(23), அருங்கால், மணிகண்டன்(40) ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thirumannur ,Masimamaka Festival , Tirumanur, jallikattu, Bulls
× RELATED திருமானூரில் தாய் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை