×

நட்சத்திர ஓட்டலில் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்எல்ஏவுடன் அமர்ந்து கட்சிக்காரர் போல செயல்படுகிறார்: பேராசிரியர் நியமனத்தில் ஐகோர்ட் கண்டனம்

சென்னை: சட்டபல்கலைகழக துணைவேந்தர்  ஆளும்கட்சி எம்.எல்.ஏக்களுடன்  சேர்ந்து  கட்சிக்காரரை போல் செயல்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டப் பல்கலைக் கழகத்தில் பதிவாளராக பணியாற்றிய டி.சங்கர் என்பவர், தன்னை பணிநீக்கம் செய்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் பதில் மனுக்களாக தாக்கல் செய்ய பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, பல்கலைக் கழக பொறுப்பு பதிவாளர் ஜெயந்தி கிருஷ்ணமூர்த்தி சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், தனி நீதிபதி, வழக்கின் எல்லையை மீறி தன் விருப்பம் போல உத்தரவுகளை பிறப்பித்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.இதையடுத்து, அவருக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, நியமனங்கள் யுஜிசி விதிகளுக்கு உட்பட்டு நடக்கிறது  என்றார்.  இதைக்கேட்ட நீதிபதிகள், சட்டபல்கலைகழக பேராசிரியர்கள் நியமனம் எப்படி நடைபெறுகிறது என்று எங்களுக்கு தெரியும். தனியார் ஓட்டலில் எம்.எல்.ஏக்களுடன் அமர்ந்து துணைவேந்தர் கட்சிக்காரரை போல செயல்படுவதையும், அவர்கள் 180 டிகிரியில் நின்றதையும் பார்த்தோம். இதுகுறித்து எங்களை எதுவும் பேச வைக்காதீர்கள் என்று கண்டனம் தெரிவித்தனர். பின்னர் மதியம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. பணி நியமனங்கள் தொடர்பாக அட்வகேட் ஜெனரல் வாதிட்டார். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : University of Law ,Vice-Chancellor ,client ,the Star Club ,MLA , Star hotel, law university vice president, MLA
× RELATED மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா ஏற்பு