×

திமுக பொதுச் செயலாளர் அன்பழகனிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்

சென்னை: திமுக பொதுச் செயலாளர் அன்பழகனை அவரது இல்லத்தில் சந்தித்து மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தற்போது அவர் வீட்டிலேயே  ஓய்வு எடுத்து வருகிறார். திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று கீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லம் சென்று அன்பழகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது திமுக பொருளாளர் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு உடனிருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,general secretary ,MK Stalin , DMK general secretary Anbazhagan, MK Stalin, inquired well
× RELATED தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்: பிரேமலதா அறிக்கை