×

தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்: பிரேமலதா அறிக்கை

சென்னை: தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம் என்றும், கடைசி வரை வீரமாக போராடி சரித்திரம் படைத்துள்ளோம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேலதா விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணி ஒரு கோடிக்கு மேல் வாக்குகளை பெற்று அசைக்க முடியாத ஒரு சக்தியாக உள்ளது. தேமுதிக போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றிகள்.

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். கடைசி வரை வீரமாகப் போராடி, தேர்தல் களத்தில், ஒரு சரித்திரத்தை படைக்கும் அளவில் போட்டியிட்டு இருக்கிறோம். அனைத்து வேட்பாளர்களும் இந்த தோல்வியை படிக்கல்லாக மாற்றி வெற்றிக்கனியை பறிக்க கடுமையாக உழைத்து, 2026 சட்டமன்ற தேர்தலை நமது இலக்காக வைத்து, இப்போதிருந்தே உழைத்து பெரிய வெற்றியைப் பெற வேண்டும். அரசியலில் வெற்றியும் தோல்வியும் அனைவருக்கும் சகஜமான ஒன்று என்பதை ஏற்றுக் கொண்டு மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று நினைத்து அடுத்த வெற்றிக்காக தயாராவோம். மேலும் அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்: பிரேமலதா அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Premalatha ,CHENNAI ,Premalatha Vijayakanth ,DMDK ,general secretary ,AIADMK- ,DMK ,
× RELATED அரசியலில் வெற்றியும் தோல்வியும்...