×

ரஷ்யாவிற்கும் ஏற்றுமதியாகும் சேவினிப்பட்டி வெள்ளரி: பசுமைக்குடில் சாகுபடியில் அசத்தும் சகோதரர்கள்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே சேவினிப்பட்டியில் விளைவிக்கப்படும் வெள்ளரிக்காய்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே சேவினிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் வினோத்குமார், முத்துக்குமார். இருவரும் டிப்ளமோ மெக்கானிக் ஆவர். சகோதரர்களான இருவரும் விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றன்றனர். தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் 2018-19ம் ஆண்டில் 2 ஆயிரம் சதுர மீட்டரில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பசுமை குடில் அமைத்து வெள்ளரி சாகுபடி செய்து வருகின்றனர். நல்ல லாபம் கிடைக்கவே அவர்கள் தொடர்ந்து வெள்ளரி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு அவ்வப்போது திருப்புத்தூர் தோட்டக்கலைத்துறை அலுவலர் காமாட்சி தொழில்நுட்ப ஆலோசனை வழங்கி வருகிறார்.

இங்கு பறிக்கப்படும் வெள்ளரிக்காய்கள் ஒட்டன்சத்திரம், சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ரஷ்யா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதுகுறித்து சகோதரர்கள் கூறுகையில், ‘பசுமைக்குடிலில் விதைப்பு செய்த இரண்டு மாதத்தில் வெள்ளரிக்காய் அறுவடைக்கு வரும். ஆண்டிற்கு இரண்டுமுறை விதைப்பு செய்யலாம். பசுமைக்குடிலில் வாரத்திற்கு 4 டன் வரை மகசூல் கிடைக்கிறது. இதன்மூலம் ரூ.1.20 லட்சம் கிடைக்கும். நல்ல லாபம் கிடைப்பதோடு, தேசிய தோட்டக்கலை துறை 50 சதவீத மானியம் வழங்குவதால் தொடர்ந்து பசுமைக்குடில் வெள்ளரி சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Russia ,brothers , Cultivation, cucumber, export
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...