×

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவில் வாரிசுகளை களமிறக்க முடிவு? சிட்டிங் எம்பிக்கள் அதிருப்தி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக முக்கிய தலைவர்கள் தங்களது வாரிசுகளை களமிறக்க முடிவு செய்திருப்பதாக தகவல் ெவளியாகியுள்ளது. இதனால், சிட்டிங் எம்எல்ஏக்கள் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் கடந்த 2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 37 ெதாகுதிகளிலும், பாஜ, பாமக தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்த நிலையில், தமிழகத்தில் இந்த முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் கடந்தமுறை வெற்றி பெற்ற 37 எம்பிக்களும் மீண்டும் சீட் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஜெயலலிதா இருக்கும் போது, வேட்பாளர்களுக்கு கட்சி சார்பில் நிதி தரப்படும். மேலும், அமைச்சர்களும், கட்சி மூத்த நிர்வாகிகளும் ஜெயலலிதாவிடம் நல்ல பெயரை வாங்க வேண்டும் என்பதற்காக போட்டி போட்டு பணத்தை செலவு செய்து எப்படியாவது வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று முனைப்பு காட்டுவார்கள். ஆனால், தற்போது அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் வேட்பாளர்களுக்கு செலவு செய்து என்ன பயன் என்று எண்ணுகிறார்கள். இதனால், அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் ெதாடர்பான பொதுக்கூட்டம் கூட பல இடங்களில் நடக்கவில்லை. அமைச்சர்கள் சிலர் தங்களது சொந்த பணத்தை செலவு செய்து எம்பிக்களை ஜெயிக்க வைத்தால் நமக்கு எதிராக அவர்கள் வேலை செய்து விட்டால் என்ன செய்வது என்ற மன நிலையிலும் சிலர் உள்ளனர்.

இதனால், தற்போதைய சிட்டிங் எம்பிக்கள் இந்த முறை சீட் கிடைக்குமா என்ற பயத்தில் உள்ளனர். மேலும், அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் தங்களது வாரிசுகளை இந்த எம்பி தேர்தலில் களத்தில் இறக்க முடிவு செய்துள்ளனர். அவர்கள், தங்களது வாரிசுகளுக்காக பணத்தை செலவு செய்து, அவர்களை வெற்றி பெற வைப்போம் என்றும் கூறி வருகின்றனர். இதனால் தான், அமைச்சர்களது வாரிசுகள் மற்றும் உறவினர்கள் சீட் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதன்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் எடப்பாடி மகன் மிதுன், தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன், தென்சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன், பொள்ளாச்சியில் வேலுமணியின் நெருங்கிய உறவினர், தஞ்சாவூரில் வைத்திலிங்கம் உறவினர் மகன், திண்டுக்கல்லில் நத்தம் விஸ்வநாதன் மகன் அமர்நாத், கடலூரில் எம்.சி.சம்பத் மகன், கரூர் தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் அப்பா உட்பட அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் மகன், நெருங்கிய உறவினர்கள் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர்.

இதனால், சிட்டிங் எம்பிக்கள் தங்களுக்கு சீட் கிடைக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால், அவர்கள் தற்போது கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும், அமைச்சர்கள் தரப்பில் எங்களது பணத்தை செலவு செய்து தான் இந்த தேர்தலில் எங்கள் வாரிசுகளை நிறுத்துகிறோம். தேர்தல் முடிந்த பிறகு, கட்டாயம் உங்களுக்கு தேவையானதை செய்கிறோம் என்று கூறியுள்ளனர். ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவில் வாரிசு அரசியல் என்ற ஒன்றே இல்லை. ஆனால், அவர் மறைந்த பிறகு அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் வாரிசு அரசியலை ெகாண்டு வர பார்க்கிறார்களே என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர் புலம்பி வருகின்றனர். மேலும், அவர்கள் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, ஜெயலலிதா பதவி வழங்கினார். அதே போன்று தற்போது தலைமையும் கட்சிக்கு உழைத்தவர்களுக்கு இந்த முறை தேர்தலில் சீட் வழங்க வேண்டும் என்றும் பேசி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : successors ,elections ,MPs , Deciding,successors,parliamentary elections,Sitting MP,dissatisfied
× RELATED பாஜக நிர்வாகியை தாக்கிய பாஜக பிரமுகர் மகன் கைது..!!