×

சேலம் மாவட்டத்தில் டிடிவி.தினகரன் 4 நாட்கள் சுற்றுப்பயணம்

சென்னை: அமமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: அமமுக துணைப்பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் வரும் 19,20 மற்றும் 22,23ம் தேதிகளில் சேலம் புறநகர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட வீரபாண்டி, ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி, சங்ககிரி ஆகிய தொகுதிகளிலும், சேலம் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு ஆகிய தொகுதிகளிலும், சேலம் புறநகர் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஓமலூர், மேட்டூர், எடப்பாடி ஆகிய தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். நிகழ்ச்சியில் அமமுக நிர்வாகிகள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Diwali Dinakaran ,Salem district ,tour , Salem County, Dinakaran
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...