×

எஸ்சிஇஆர்டி இயக்குனராக உஷாராணி நியமனம்

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம்(எஸ்சிஇஆர்டி) இயக்குனராக இருந்த அறிவொளி மாற்றப்பட்டு, உஷாராணி புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் எஸ்சிஇஆர்டி அலுவலகத்தில் ஜனவரி 30ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைபற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.

எஸ்சிஇஆர்டி இயக்குனர் அறிவொளி உள்பட பல்வேறு பதவிகளில் இருந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் / செயலாளராக இருந்த உஷாராணியை எஸ்சிஇஆர்டி இயக்குனராக பள்ளிக்கல்வித்துறை நியமித்துள்ளது. அதே நேரத்தில் அறிவொளியை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளராகவும் நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Usherani ,SCERT , Usherani appointed ,SCERT director
× RELATED ரூ.105 கோடி கல்வி முறைகேடு ஐஏஎஸ் அதிகாரி உள்பட 3 பேர் கைது