×

சந்திரகிரி தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.10 கோடி மதிப்பில் சுவர் கடிகாரங்கள் வழங்கிய எம்எல்ஏ: நடவடிக்கைக்கோரி தெ.தேசம் தேர்தல் ஆணையத்தில் புகார்

திருமலை: ஆந்திராவில் வாக்காளர்களை கவர்வதற்காக தனது தொகுதியில் ரூ.10 கோடி மதிப்புள்ள சுவர் கடிகாரங்களை வழங்கிய எம்எல்ஏ செவிரெட்டி  பாஸ்கர்ரெட்டி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தெலுங்கு தேசம் கட்சியினர் தேர்தல் ஆணைத்தில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உளள்து.ஆந்திராவில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் ஒரே நேரத்தில் நடக்க உள்ளது. இதற்கு சில வாரங்களில் அறிவிப்பு வெளியிடலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வாக்காளர்களை கவர்வதற்காக பல்வேறு கட்சிகள் தற்போது களமிறங்கி உள்ளனர்.அவ்வாறு சந்திரகிரி தொகுதியில் தற்போதையை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி ரூ.1000 மதிப்புள்ள ஒரு லட்சம் சுவர்  கடிகாரத்தை பெற்று வாக்காளர்களுக்கு வழங்கியிருப்பதாகவும், இதன் மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளரும், திருப்பதி புறநகர் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவருமான நரசிம்ம யாதவ் தேர்தல்  ஆணையத்துக்கு இமெயிலில் புகார் அனுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘வாக்காளர்களை திசை திருப்பும் விதமாக செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி   செயல்பட்டு  வருகிறார். மக்களுக்கு அவர் வழங்கிய கடிகாரத்திற்கு ஜிஎஸ்டி  வரி கட்டப்பட்டதா  எங்கிருந்து, எப்படி இந்த கடிகாரம் பெறப்பட்டது  என்பதை  விசாரிக்க  வேண்டும். அவரது கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் எம்எல்ஏ பதவியை ரத்து செய்வதோடு,  பரிசு பொருட்களை  வழங்கிய எம்எல்ஏ  செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி தேர்தலில் போட்டியிட  தடை விதிக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MLA ,voters ,Chandragiri ,Election Commission ,constituency , Chandragiri constituency, wall clock, voters, MLA, te, polling commission
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...