×

அம்பானி மீது எரிக்சன் புகார் ‘ரபேலுக்கு பணம் இருக்கிறது: நிலுவையை திருப்பி தர பணமில்லை’

புதுடெல்லி:  ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி தொலைத்தொடர்பு கருவிகள் வாங்கியதற்காக எரிக்சன்  நிறுவனத்துக்கு ₹1,600 ேகாடி செலுத்த வேண்டி உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, குறிப்பிட்ட தேதியில் தவணை தொகையை ரிலையன்ஸ் நிறுவனம்  செலுத்தவில்லை. இதனால், அனில் அம்பானி உள்ளிட்ட  மூன்று பேர் மீது எரிக்சன் இந்தியா நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் நாரிமன், வினீத் சரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.  அப்போது ரபேல் திட்டத்துக்கு  அம்பானியிடம்  பணம் இருக்கிறது; ஆனால் எங்கள் நிலுவையை திருப்பி தர பணமில்லை’ என எரிக்சன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ericsson ,Ambani ,Rafael , Ambani, Ericsson, Complaint, Raphael, money outstanding
× RELATED முகேஷ் அம்பானி வீட்டு திருமண...