×

ரபேல் போர் விமான ஒப்பந்தம் மாநிலங்களவையிலும் சிஏஜி அறிக்கை தாக்கல்

புதுடெல்லி: ரபேல் ஒப்பந்தம் தொடர்பான மத்திய கணக்கு தணிக்கை குழுவின் (சிஏஜி) அறிக்கை, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்து இருப்பதாகவும், இது தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் காங்கிரஸ்  தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த ஒப்பந்தம் தொடர்பான மத்திய கணக்கு தணிக்கை குழுவின் அறிக்கை நேற்று முன்தினம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், காங்கிரஸ் ஆ்ட்சியில் செய்யப்பட்ட ரபேல் ஒப்பந்தத்துக்கும், பாஜ ஆட்சியில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்துக்கும் இடையே உள்ள விலை உள்ளிட்ட வித்தியாசங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளி செய்தன.   

இந்த பரபரப்பான சூழலில், மாநிலங்களவையில் நேற்று இந்த தணிக்கை அறிக்கையை நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார். 141 பக்கங்கள் கொண்ட அதில், ‘காங்கிரஸ் அரசு செய்த ரபேல் ஒப்பந்தத்தை விட தற்போது 2.86 சதவீதம் குறைவான விலைக்குதான் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் எம்பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘இது உண்மை கிடையாது’ என கூறி நாடாளுமன்ற வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மறுப்பது ஏன்?
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களை மறுத்து, டெல்லியில் நேற்று மாலை ராகுல் பேட்டி அளித்தார். அதில், ‘‘ரபேல் போர் விமானங்கள் குறைந்த விலைக்கு கிடைப்பதாலும், விரைவாக விநியோகம் செய்யப்படும் என்ற உறுதி காரணமாகவும் 36 விமானங்களை கொள்முதல் செய்ய முடிவு செய்ததாக பாஜ அரசு தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்ற குழு, ஐமு கூட்டணி அரசு செய்த ஒப்பந்தத்துக்கும் இப்போதைய ஒப்பந்தத்துக்கும் வேறுபாடு இருப்பதாக குறிப்பிடப்படவில்லை. புதிய ஒப்பந்தத்தை செய்ய ஒரே காரணம், தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடியை பெற்று தருவதுதான். ரபேல் ஒப்பந்தத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என கூறும் நீங்கள்,  நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட பயப்படுவது ஏன்?’’ என கேள்வி எழுப்பினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CAG ,Rajya Sabha , The CAG report, been filed ,afael Air Force Agreement,e Rajya Sabha
× RELATED சிஏஜி அம்பலப்படுத்திய மோடி அரசின்...