×

வாகனங்களை கண்காணிக்க ஆரியங்காவு சோதனைச்சாவடியில் நவீன கேமராக்கள்

செங்கோட்டை: தமிழக - கேரள எல்லையான ஆரியங்காவு சோதனைச் சாவடியிலும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. நெல்லை செங்கோட்டை - ஆரியங்காவு வழித்தடம் தமிழக - கேரள போக்குவரத்தில் முக்கிய இடம் பெறுகிறது. இந்த வழியாக தினமும் கேரளா நோக்கியும், கேரளாவிலிருந்து தமிழகம் நோக்கியும் ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள், பேருந்துகள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் 24 மணி நேரமும் சென்று வருகின்றன. எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும் இந்த வழியாக கேரளாவுக்கு செல்லும் வாகனங்களில் கல், மணல், ஜல்லி போன்ற கனிமவள பொருட்கள், ரேஷன் பொருட்கள், போதைப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதும், பிடிபடுவதும் வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது.

இந்த கடத்தல் சம்பவங்களை கண்காணிக்கும் பொருட்டு ஆரியங்காவிலுள்ள கேரள சோதனை சாவடியில், வாகனங்கள் வரும் திசையை நோக்கி சுழலும் வசதி கொண்ட நவீன கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பொருத்தப்பட்டுள்ள இந்த மூன்று கண்காணிப்பு கேமராக்களும் சோதனை சாவடி வழியாக கடந்து செல்லும் வாகனங்களின் பதிவு எண்ணை துல்லியமாக கண்டறியும் தொழில்நுட்பம் கொண்டது குறிப்பிடத்தக்கது. இதே போன்ற கேமராக்கள் தமிழக எல்லையான புளியரை சோதனை சாவடியிலும் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : checkpoint ,Aryanangai , Aurangabad testing and modern cameras
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...