×

பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி சேலத்தில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

சேலம்: பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கறவை மாடுகளுக்கு தரப்படும் தீவனத்தின் விலை பலமடங்கு உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பால் உற்பத்திக்காக செலவிடப்படும் தொகை, கொள்முதல் விலையை விட மிகவும் அதிகமாக இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் பால் உற்பத்தியில் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் வருத்தம் தெரிவித்தனர். இதனால் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி கடந்த 4 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், பேச்சுவார்த்தை நடத்தியும், அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தியதோடு, பால் உற்பத்தியாளர்களுக்கு அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்யவில்லை என குற்றம் கூறியுள்ளனர். எனவே, பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரியும், மாடுகளுக்கு அளிக்கக்கூடிய கால்நடை தீவனங்களுக்கு 50% மானியத்தை அரசு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தினர். அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை தொடர போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coca-Cola , Milk,purchase price,manufacturers,struggle,salem
× RELATED கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும்...