×

சினிமா தியேட்டர்களில் உணவுப்பண்டங்களை கொண்டு செல்வதற்கு உத்தரவிட முடியாது: பொதுநல வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் தமிழ்வேந்தன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:சென்னையில் உள்ள சினிமா தியேட்டர்களில் உணவுப் பண்டங்களை கொண்டு செல்ல தடை விதித்துள்ளனர். குழந்தைகளுக்கான தண்ணீர், வெந்நீர், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களைக் கூட கொண்டு செல்ல அனுமதியில்லை.  தியேட்டர்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை மிகவும் அதிகம். எனவே, படம் பார்க்கச் செல்பவர்கள் தங்களுடன் அத்தியாவசிய தேவையான உணவுப் பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்குமாறு உத்தரவிடக்கோரி அரசுக்கு மனு அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, சினிமா தியேட்டர்களில் அத்தியாவசிய உணவு பண்டங்களை கொண்டு செல்ல அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சினிமா தியேட்டர்கள் தனியாருக்கு சொந்தமானது. அவர்களுக்கு உத்தரவிடுமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தவிட்டனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cinema Theaters, Foods, Womens Case, High Court,
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...