×

டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் 8 பேர் இடமாற்றம்

சென்னை: டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் 8 பேரை பணி இடமாற்றம் செய்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு:கடலூர் மாவட்ட மேலாளர் ஜி.சக்தி பிரேம் சந்தர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், திண்டுக்கல் மாவட்ட மேலாளர் அ.கந்தன் கடலூர் மாவட்டத்திற்கும், திருநெல்வேலி  மாவட்ட மேலாளர் எஸ்.வடமலை முத்து விழுப்புரம் மாவட்டத்திற்கும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மேலாளர் எஸ்.பி.ஷியாம் சுந்தர் திண்டுக்கல் மாவட்டத்திற்கும்,  வேலூர் மாவட்ட மேலாளர் ஜி.ராமசந்தர் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கும் பணி இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். இதேபோல், கரூர் மாவட்ட மேலாளர் வி.ஐயப்பன் வேலூர் மாவட்டத்திற்கும், புதுக்கோட்டை மாவட்ட மேலாளர் எஸ்.சவுந்தரபாண்டியன் திருநெல்வேலி  மாவட்டத்திற்கும், விழுப்புரம் மாவட்ட மேலாளர் என்.விஜயசண்முகம் கரூர் மாவட்டத்திற்கும் பணி இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். மேலும், இதுகுறித்த உத்தரவு அந்தந்த மாவட்ட மேலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : managers ,Tasmanag ,district , 8 managers,Tasmanag district, transferred
× RELATED செங்கல்பட்டு வட்டாட்சியர்...