×

பாலிவுட்டில் செக்ஸ் மிருகங்கள் இரவு விருந்துக்கு அழைக்கிறார்கள்: நடிகை ஷெர்லின் சோப்ரா பரபரப்பு பேட்டி

சென்னை: தமிழில் ‘’யுனிவர்சிட்டி’’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஆடியவர், ஷெர்லின் சோப்ரா. இந்தி, தெலுங்கு, ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ள அவர்,  ‘’காமசூத்ரா’’ 3டி படத்திலும் நடித்தார். சமீபத்தில் ஷெர்லின் சோப்ரா புதிய பாடல் வீடியோ வெளியிட்டார். அப்போதுஅவர் கூறியதாவது: திரையுலகில், குறிப்பாக பாலிவுட்டில் ஏராளமான  செக்ஸ் மிருகங்கள் இருக்கிறது. சினிமா வாய்ப்பு தேடி நடிக்க வரும் பெண்களை அவர்கள், ‘’டின்னருக்கு (இரவு விருந்து) வருகிறாயா? வேலை விஷயமாக உன்னிடம் பேச வேண்டும்’’  என்று அழைப்பார்கள். ஆனால், உண்மையில் அதற்கான அர்த்தம் வேறு.

அன்று இரவு அவருடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்கான சீக்ரெட் வார்த்தைதான், டின்னர். நான்  சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப நாட்களில் இது எனக்குப் புரியவில்லை. ஆனால் இப்போது, டின்னர் என்ற வார்த்தையைக் கூட காதில் கேட்க நான் விரும்பவில்லை. இனி என் வாழ்க்கையில்,  ‘’டின்னருக்கு வா’’ என்ற அழைப்பை ஏற்றுக்கொள்ள மாட்டேன். இவ்வாறு அவர் கூறியிருப்பது, பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sherlin Chopra , Sexual,dinner: Bollywood actress,Sherlin Chopra interviewed
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...