×

வண்ணாரப்பேட்டை-டிஎம்ஸ் மெட்ரோ ரயில் சேவை வரும் 10-ம் தேதி தொடக்கம் !

சென்னை: வண்ணாரப்பேட்டை-டிஎம்ஸ் மெட்ரோ ரயில் சேவை வரும் 10-ம் தேதி முதல் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட வழித்தட பணிகள் முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து பயணிகள் சேவை தொடங்கப்படவுள்ளது. இதன் தொடக்க விழா ஒத்திகை சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ளது. சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

அதன்படி கோயம்பேடு- ஆலந்தூர், விமான நிலையம்-சின்னமலை, பரங்கிமலை-சென்ட்ரல், விமான நிலையம்- சென்ட்ரல், சின்னமலை-டி.எம்.எஸ். ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி டி.எம்.எஸ்- வண்ணாரப்பேட்டை இடையே 9.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், சென்ட்ரல், ஐகோர்ட்டு, மண்ணடி ஆகிய 6 மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளன. இந்த நிலையில் டி.எம்.எஸ்- வண்ணாரப்பேட்டை இடையேயான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை வரும் 10-ம் தேதி முதல் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Verma-DM , vannarapettai-DM's ,Metro Rail service ,begin on 10th
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...