×

மீனவ மக்களுக்காக குரல் கொடுப்பேன்: துரை சந்திரசேகர் உறுதி

பொன்னேரி: தமிழக சட்டமன்றத் தேர்தலில் பொன்னேரி (தனி) தொகுதியில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் துரை சந்திரசேகர் போட்டியிடுகிறார். அவர் இத்தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமாரன் தலைமையில் திறந்த ஜீப்பில் நின்றபடி, வீதி வீதியாக சென்று மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது, என்னை வெற்றி பெறவைத்தால், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை செய்து தருவேன். நான் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு சென்றதும், பழவேற்காடு மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது குறித்து பேசுவேன். அவர்களுக்கு சாலை வசதி, சமுதாயக்கூடம், கழிப்பட வசதி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பலவற்றை பெற்று தருவேன் என்று உறுதி கூறினார்.பிரசாரத்தின்போது மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம், மாவட்ட துணை தலைவர் வி.என்.தாஸ், மீஞ்சூர் வட்டார தலைவர் ஜலந்தர், மாவட்ட பொது செயலாளர் சந்திரசேகர், கோபிகிருஷ்ணன், ஜெயக்குமார், காட்டுப்பள்ளி முனுசாமி, பிரபு, முகமது தாரிக், சிலம்பரசன். பழவை சந்திரசேகர், திமுகவில் அவைத்தலைவர் பகலவன், ஒன்றிய செயலாளர் ரமேஷ்ராஜ், மீஞ்சூர் கோதண்டம், முன்னாள் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் சுந்தரம், வக்கீல் அன்புவாணன், கோளூர் கதிரவன், மீஞ்சூர் மோகன்ராஜ், ஒன்றியக்குழு தலைவர் ரவி, மாவட்ட கவுன்சிலர்கள் உதயசூரியன், தேசராணி தேசப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள், முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் சிக்கந்தர் பாஷா, விசிக மாவட்ட செயலாளர் கோபி நயினார், வழக்கறிஞர் நெடுஞ்செழியன், வல்லூர் ஏழுமலைவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post மீனவ மக்களுக்காக குரல் கொடுப்பேன்: துரை சந்திரசேகர் உறுதி appeared first on Dinakaran.

Tags : Durai Chandrasekhar ,Ponneri ,Tamil Nadu assembly elections ,Congress ,Vakiel ,DMK ,
× RELATED பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட...