×

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 'ஜிசாட்-31'செயற்கைகோள்

பிரெஞ்ச் கயானா: தகவல் தொடர்பு சேவைகளுக்கான, ஜிசாட்-31 செயற்கைக்கோள், ஐரோப்பிய நாடான, பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள, பிரெஞ்ச் கயானாவில் இருந்து இன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் வகையில் ஜிசாட் - 31 என்ற 40வது செயற்கைக்கோளை இஸ்ரோ ஏவ திட்டமிட்டது. இதன்படி பிரான்ஸ் நாட்டின், பிரெஞ்ச் கயானாவில் இருந்து, ஏரியான் - 5 ராக்கெட் மூலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

தகவல் தொடர்பு மற்றும் தொலைக்காட்சி சேவைகளை பெற, இந்த செயற்கைக்கோள் உதவும். மொத்தம், 2,535 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள், உள்நாட்டில் தகவல் பரிமாற்றத்துக்கு மட்டுமல்லாது நாட்டை சுற்றியுள்ள பெருங்கடல்கள் குறித்த தகவல்களையும் அளிக்கும். இதன் ஆயுட்காலம், 15 ஆண்டுகள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : launch , GSAT-31, ISRO,
× RELATED தனியார் நிறுவன ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி!!