×

தென் ஆப்ரிக்க தொடர் இலங்கை டெஸ்ட் அணியில் கேப்டன் சண்டிமால் நீக்கம்

கொழும்பு: தென் ஆப்ரிக்காவுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள இலங்கை அணியில் கேப்டன் தினேஷ் சண்டிமால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரி 0-2 என்ற கணக்கில் தோற்ற இலங்கை அணி, அடுத்து தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் பிப். 13ம் தேதியும், 2வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் 21ம் தேதியும்  தொடங்குகிறது,இந்த போட்டிகளுக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தற்போது பார்மில் இல்லாத கேப்டன் சண்டிமால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரில் அவர் 4 இன்னிங்சில் 24 ரன் மட்டுமே சேர்த்தது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் போட்டிகளில் விளையாடி இழந்த பார்மை மீட்கும் வகையில், தென் ஆப்ரிக்க தொடருக்கு சண்டிமால் சேர்க்கப்படவில்லை என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அவருக்கு பதிலாக திமத் கருணரத்னே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை டெஸ்ட் அணி: திமத் கருணரத்னே (கேப்டன்), நிரோஷன் டிக்வெல்லா (துணை கேப்டன்), லாகிரு திரிமன்னே, கவுஷல் சில்வா, குசால் மெண்டிஸ், குசால் பெரேரா, மிலிண்டா வர்தனா, தனஞ்ஜெயா டி சில்வா, ஒஷதா பெர்னாண்டோ, ஏஞ்சலோ பெரேரா, சுரங்கா லக்மல், கசுன் ரஜிதா, விஷ்வா பெர்ணாண்டோ, சமிகா கருணரத்னே, முகமது ஷிராஸ், லக்‌ஷன் சந்தகன், லசித் எம்புல்டெனியா.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chandimal ,South Africa ,squad ,Sri Lanka Test , South Africa, Sri Lanka, Test team, Captain Chandimal, dismissal
× RELATED உலக கோப்பைக்கு தயாராவதில் தடுமாறும்...