×

கும்பேஸ்வரர் கோயில் புதிய ஷவரில் யானை மங்களம் உற்சாக குளியல்

கும்பகோணம்:  கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் யானை மங்களம், புதிதாக அமைக்கப்பட்ட ஷவர் பாத்தில் உற்சாகமாக குளித்து வருகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் யானை மங்களம் உள்ளது. இந்த யானை மங்களம், சளி பிரச்னையால் அவதிப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக புத்துணர்வு முகாமுக்கு யானை மங்களம் செல்லவில்லை. கோயிலிலேயே யானைக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. மங்களத்திற்கு சளி பிரச்சனையால் ஒவ்வாமை ஏற்படும் என்ற காரணத்தால் , முகாமிற்கு அனுப்பி வைக்காமல், அதற்கு தேவையான உணவுகள், மருந்துகள் கோயிலிலேயே வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள யானைகளுக்கு இயற்கை சூழல் நிறைந்த பகுதியில் குளிப்பதற்கு ஷவர் அமைக்க வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அதன்பேரில் தமிழக கோயில்களில் யானைகள் குளிப்பதற்காக ஷவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் யானை குறிப்பதற்காக ஷவர் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தினம்தோறும் காலை, மாலை நேரங்களில் புதிதாக அமைக்கப்பட்ட ஷவரில் மங்களம் யானை உற்சாகமாக குளித்து வருகிறது.

இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், யானைகளுக்கு இயற்கை சூழலில் ஷவர் அமைத்து கொடுக்க வேண்டும். யானை உற்சாகமாக குளித்தால் அதற்கு சூடு குறையும், தொற்று நோய்கள் பரவாமல் இருக்கும் என்று யானைக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அதன்படி ரூ.1.50 லட்சம் மதிப்பில் தற்போது ஷவர் மற்றும் யானை நிற்பதற்கு தரைதளம் அமைக்கப்பட்டது. தினந்தோறும் காலை, மாலையில் யானை மங்களம் ஷவரில் குளிப்பதால் உற்சாகமாக உள்ளது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : shrine ,Kumbeswarar Temple , Kumbeswarar Temple, Elephant, Bath
× RELATED கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல திருவிழாவில் நற்கருணை பவனி