×

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஸ்வைப்பிங் மெஷின்கள் வருகை : 17ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது

வேலூர்: தமிழகத்தில் ஆன்லைன் மூலம் பத்திரம் பதிவு செய்யும் திட்டத்தை கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழகத்தில் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரம் செய்ய வரும் பொதுமக்களிடம் 1,000த்திற்கு மேல் ரொக்கமாக வசூலிக்கக்கூடாது என்ற உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ஆனால் இதனை பின்பற்றாமல் ரொக்கமாக பணம் பெறப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் புழங்குவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன், சார்பு பதிவாளர் அலுவலகங்களில் பணம் இல்லாத பரிவர்த்தனை கொண்டு வர நடவடிக்கை எடுத்தார்.

அதன்படி, எஸ்பிஐ வங்கி மூலம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வாயிலாக கட்டணம் வசூலிக்கும் வகையில் ஸ்வைப்பிங் மெஷின்கள் வழங்க வேண்டும் என்று அந்த வங்கி தலைமை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினர். இதற்கு ஒப்புதல் வழங்கி எஸ்பிஐ வங்கி, 575 சார்பதிவாளர் அலுவலங்களுக்கு ஸ்வைப்பிங் மெஷின்கள் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அதன்படி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள 44 சார் பதிவாளர் அலுவலகங்களில் ஸ்வைப்பிங் மெஷின்கள் அந்தந்த சார்பதிவாளர் அலுவலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்வைப்பிங் மெஷின்கள் வரும் 17ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று பத்திரப்பதிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : districts ,Thiruvannamalai ,Vellore , Vellore, Thiruvannamalai, Swiping Machines
× RELATED தமிழ்நாட்டில் வெப்ப அலையை அடுத்து...