×

அத்தியூர் கிராமத்தில் எருது விடும் விழா : சீறிப்பாய்ந்த காளைகள்

அணைக்கட்டு: அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த அத்தியூர்  கிராமத்தில் தை அமாவாசையை முன்னிட்டு நேற்று எருதுவிடும் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. பகல் 9 மணியளவில் காளைகளுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தது. காலை 10 மணிக்கு எருதுவிடும் விழாவை உதவி ஆணையர்(கலால்) பூங்கொடி தொடங்கி வைத்தார். கால்நடை மருத்துவர் ரகுவின் பரிசோதனைக்கு பிறகு காளைகள் ஒவ்வொன்றாக வீதியில் அவிழ்த்து விடபட்டன.
இதில் அணைக்கட்டு, ஊசூர், புலிமேடு, அத்தியூர், கோவிந்தரெட்டிபாளையம் உள்ளிட்ட உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து 70க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடின.  

இதனைக்காண சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் விழா நடக்கும் பகுதியில்  குவிந்தனர். வீதியில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இளைஞர்கள் உற்சாகத்துடன் விரட்டினர். ஒவ்வொரு காளைகளும் 2 முதல் 3  சுற்றுகள் வரை விடப்பட்டன. தொடர்ந்து விழா மதியம் 1 மணியளவில் முடித்து வைக்கப்பட்டது. தாசில்தார் ஹெலன்ராணி, மண்டல துணை தாசில்தார் பன்னீர்செல்வம், வருவாய் ஆய்வாளர் நித்யா மற்றும் வருவாய் துறையினர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் விழா நடக்கிறதா என கண்காணித்தனர்.

டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில்,  இன்ஸ்பெக்டர் நந்தகுமார், அரியூர் போலீசார் உள்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஊசூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார  மருத்துவ குழுவினர்கள் அங்கு முகாமிட்டு மாடுகள் முட்டியதில் காயமடைந்த 10 பேருக்கு சிகிச்சை அளித்தனர். அதில் படுகாயமடைந்த  அரசு பள்ளி மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விழா ஏற்பாடுகளை ஊர்பொது மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Festival ,village , Attiyur,anaikkattu, calves
× RELATED கலசபாக்கம், சேத்துப்பட்டு அருகே அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம்