×

ஐகோர்ட் கிளையில் முறையீடு மன அழுத்தத்தை போக்க போலீசாருக்கு கவுன்சலிங்

மதுரை: போலீசாரின் மன அழுத்தத்தை போக்க கவுன்சலிங் நடத்த வேண்டுமென ஐகோர்ட் கிளை பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.  ஐகோர்ட் கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் நேற்று வழக்குகளை விசாரிக்கத் துவங்கினர். அப்போது, வக்கீல் ஏ.கண்ணன் ஆஜராகி, தமிழகத்தில் போலீசார் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்துடன் பணியாற்றி வருகின்றனர். இதனால், சிலர் தற்ெகாலை செய்கின்றனர். சிலர், பிறரது தற்கொலைக்கு காரணமாக உள்ளனர் எனவே, இதுகுறித்து ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றார். அப்போது நீதிபதிகள், தங்கள் முறையீடு குறித்து பதிவாளரிடம் புகார் மனுவாக அளிக்கலாம் என்றனர். இதையடுத்து அவர் அளித்த மனுவில், ‘‘திருவள்ளூர் மாவட்டம் பள்ளிபட்டைச் சேர்ந்த 2ம் நிலை காவலர்  மணிகண்டன், பிறந்த நாளன்று விடுப்பு கிடைக்காததால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையில் கால் டாக்சி டிரைவர் ஒருவர் போலீஸ் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்வதாக வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்தார். கடந்த ஆண்டு திருச்சியில் போக்குவரத்து ேபாலீஸ் அதிகாரி ஒருவர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பலியானார். போலீசாரின் இதுபோன்ற நடவடிக்கைக்கு அவர்களது மன அழுத்தமே காரணம். எனவே, போலீசாருக்கு ஷிப்ட் முறையில் பணி வழங்க ேவண்டும். பழைய பென்ஷன் திட்டத்ைத நடைமுறை படுத்த வேண்டும். ஒற்றை சாளர முறையில் ெசாந்த மாவட்டங்களில் பணி வழங்க வேண்டும். மாவட்டந்தோறும் கவுன்சலிங் மையம் அமைக்க வேண்டும். ஐநா வழிகாட்டுதல் படி தேவையான அளவுக்கு போலீசார் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதுகுறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்,’’ என்று தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : appeal court , Judicial Branch, Depression, Police, Counseling
× RELATED பெண் துறவிகளை கொச்சைப்படுத்துவதாக...