×

ஓட்டுநர் உரிம சேவைகளுக்காக‘‘முகமற்ற சேவைகள்” தொடக்கம்: டெல்லி அரசு அறிவிப்பு

புதுடெலலி: இ-ரிக்‌ஷா ஓட்டுநர் பயிற்சிக்கான உரிமம்(லேனர் லைசென்ஸ்)  கோருவோர்,  இனி முன்பதிவு இன்றி நேரடியாகவே உரிமம் வழங்கும் ஆணைதய்தை அணுகலாம் என டெல்லி அரசு  தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள மண்டல அலுவலகங்கள் அல்லது பிராந்திய  போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓக்கள்) ஆகியவை செயல்படும் விதத்தில் மாற்றங்களைக்  கொண்டுவர அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒருபகுதியாக பதிவு சான்றிதழ்கள் (ஆர்.சி) மற்றும் உரிமம் தொடர்பான  செயல்பாடுகளுக்காக முகமற்ற சேவைகளை” தொடங்கியுள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இது தற்போது  சோதனை முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த புதிய முறையின்படி, சார்தி சப்ட்வேர் மூலம் ஆன்லைனில் கட்டணத்தை செலுத்திய பின்னர் விண்ணப்பதாரர்கள் சம்மந்தப்பட்ட மண்டல ஆர்டிஓ அலுவலக உரிமம் வழங்கும் அதிகாரியை வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் மாலை 2 மணி முதல் 4 வரை நேரடியாக அணுகலாம். இந்த புதிய முறைக்கு மாற விரும்பும் விண்ணப்பதாரர்கள் இதில் சந்திக்கும் எந்தவொரு சிக்கலையும் கண்காணிக்கவும், சிரமங்கள் குறித்து  வழிகாட்டவும் மோட்டார் உரிம அதிகாரிகள்(எம்எல்ஓ) தங்கள் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என டெல்லி அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த சில மாதங்களில் முகமற்ற செயல்முறை அமைப்பை(பேஸ்லெஸ் நடைமுறை) 70 அத்தியாவசிய சேவைகளுக்கும் இரண்டு கட்டங்களாகஅறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.மேலும், வேலை நாட்களில் உரிமம் எடுப்பதற்கான சோதனை மேற்கொள்வதில் சிரமம் இருப்பின்  ஞாயிற்றுக்கிழமைகளில் சோதனைக்கு ஆஜராகும்  வாய்ப்பையும் அரசாங்கம் வழங்கியுள்ளது. டெல்லி இ-வாகன கொள்கை 2020 இன் கீழ் மின்சார  வாகனங்களை ஊக்குவிக்கும் முயற்சியாக,  இ-ரிக்‌ஷாவை வாங்குவதற்காக டெல்லி  அரசு  30,000 மானியத்தை வழங்கும். இதுபற்றி மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறுகையில், ”இந்த புதிய நடைமுறையை அமல்படுத்துவதன் மூலம் வெயிட்டிங் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது ” என்றார்….

The post ஓட்டுநர் உரிம சேவைகளுக்காக‘‘முகமற்ற சேவைகள்” தொடக்கம்: டெல்லி அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi Govt. ,NEW DELHI ,E-Rickshaw ,Delhi Government ,Dinakaran ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி