×

திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத 4,000 நகரங்கள்

புதுடெல்லி: ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் 4 ஆயிரம் நகரங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவையாக மாறி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.‘தூய்மை இந்தியா’ திட்டத்தை மத்திய அரசு கடந்த 2014ம்  ஆண்டு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 4,378 நகரங்களில் 4,140 நகரங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவையாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதை மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சக அதிகாரி  தெரிவித்தார். 62 லட்சத்து 42 ஆயிரத்து 220 தனிக் கழிப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் 93 சதவீதம் முடிக்கப்பட்டு உள்ளதாகவும், 5 லட்சம் சமுதாய, பொதுக்கழிப்பறைகள் கட்டுவதில் 100 சதவீத இலக்கை எட்டி  இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : cities ,space , Open space, towns, cleanliness India 'project
× RELATED கோடை விடுமுறையை ஒட்டி பயணிகள்...