×

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு 5 டன் குட்காவுடன் வந்த லாரி பறிமுதல்: காரில் ஏறி டிரைவர் ஓட்டம்

புழல்: பெங்களூருவில் இருந்து சென்னைக்கு 5 டன் குட்காவுடன் வந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் ஆவணங்களை கொடுத்துவிட்டு  தப்பி ஓடிய டிரைவர் குறித்து விசாரித்து வருகின்றனர். தமிழக வணிகவரி துறை மாநில வரி அலுவலர் விஜயகுமார் மற்றும் துணை வரி அலுவலர் பிரேம்குமார் ஆகியோர் நேற்று மாலை 3.30 மணியளவில் செங்குன்றம்  அடுத்த நல்லூர் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சென்னையில் இருந்து சோழவரம் நோக்கி வந்த லாரி நிறுத்துமாறு  கூறியும் லாரி நிற்காமல் வேகமாக சென்றது. உடனே வணிகவரித்துறை அதிகாரிகள் தங்களது வாகனத்தில் 1 கி.மீ தூரத்துக்கு லாரியை விரட்டி சென்று சோழவரம்  பஜார் சாலை பகுதியில் மடக்கினர். பின்னர் லாரி டிரைவரிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

இதையடுத்து லாரியின் ஆவணங்களை அதிகாரிகள் கேட்டபோது ஆவணங்களை எடுத்து கொடுத்துவிட்டு அவ்வழியாக வந்த காரில் ஏறி டிரைவர் தப்பி சென்றார்.  லாரியை அதிகாரிகள் சோதனை செய்தபோது சுமார் 5 டன் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.டிரைவர் கொடுத்துவிட்டு சென்ற ஆவணங்களை ஆய்வு செய்தபோது, ரவிச்சந்திரன் (28) என்பதும், கிருஷ்ணகிரி அடுத்த கணபதி நகரை சேர்ந்தவர் என்பதும்  தெரிந்தது. பெங்களூருவில் இருந்து வேலூர், சென்னை வழியாக கடத்தி வரப்பட்டு சோழவரம் அருகே உள்ள குடோனில் பதுக்கி சென்னை சுற்றுப்பகுதிகளில்  விற்பனை செய்ய கொண்டு வரப்பட்டது என்பதும் தெரிந்தது. இதையடுத்து குட்கா பொருட்களுடன் லாரியை புழல் வணிக வரித்துறை அலுவலகத்தில் வைத்து  அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bengaluru ,Gurgaon , truck carrying,5 tonnes, Gurgaon,Bengaluru
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...