×

தேர்தல் பிரசாரத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்: மதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: தேர்தல் பிரசாரத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதிமுக உயர்நிலைக்குழு, மாவட்ட செயலாளர்கள், அரசியல் ஆலோசனை குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு அவை தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை  தாங்கினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பொருளாளர் கணேச மூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் செங்குட்டுவன், ஜீவன், கழக குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:  பிரதமர் மோடி, தேர்தல் பரப்புரைக்காக பாஜ சார்பில் தமிழகத்தில் உரையாற்றுவது அவரது உரிமை. ஆனால், தமிழகம் வரும் பிரதமர் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் அவரது வருகையை எதிர்த்து கருப்புக் கொடி காட்டுவது  என்று ஏற்கனவே கட்சி பொதுச்செயலாளர் அறிவித்திருக்கிறார். எனவே, பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து கட்சிப் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கருப்புக்கொடி அறப்போராட்டம் நடத்துவது என்று மதிமுக  மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

àகாந்தி முதல் கௌரி லங்கேஷ் வரையில் மதவாத சக்திகளின் இந்தக் கொலைவெறி தொடர்வது நாட்டின் ஜனநாயகத்துக்கும் மதச் சார்பின்மைக்கும் பெரும் அச்சுறுத்தலாகும். பாஜ அரசின் சூழ்ச்சியையும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிரான நயவஞ்சகத்தையும் புரிந்து கொள்ளாமல், 2019 ஜனவரி 8-ஆம் தேதி நாடாளுமன்ற மக்கள் அவையிலும், ஜனவரி 9-ஆம் தேதி மாநிலங்கள் அவையிலும்  பொருளாதார இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்டம் 124ஆவது திருத்த சட்ட முன்வடிவுக்குப் பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்து, இச்சட்டத்தை நிறைவேற்றி இருப்பது வரலாற்றுப் பிழையாகும் என்பதை மதிமுக  சுட்டிக்காட்டுவதுடன், சமூகநீதியைப் பாதுகாக்கத் தேவையான சட்ட நடவடிக்கைகள், போராட்டங்களுக்கு திராவிடர் கழகம், திமுக உள்ளிட்ட ஒத்த கருத்துடைய கட்சிகள், அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றுவது என்று  இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

àபோதுமான அளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் தமிழக அரசு திறக்க வேண்டும்.
à அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் மீது அச்சுறுத்தும் வகையில் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுப்பதைக் கைவிட வேண்டும்.
à சி.பி.எஸ்.இ. நடத்தும் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கும் தேர்வு முறையை ரத்து செய்திடத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : candidate ,Modi ,district resolution meeting , Election campaign, PM Modi, black flag, demonstration, MDM district secretariat meeting, resolution
× RELATED விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி...