- தில்லி
- குருத்வாரா
- புது தில்லி
- டெல்லி குருத்வாரா நிர்வாக வாரியம்
- சீக்கிய குருத்வாரா கமிட்டி
- டெல்லி குருத்வாரா தேர்தல்
- தின மலர்
புதுடெல்லி: டெல்லி குருத்வாரா நிர்வாக கமிட்டிக்கு ஏப்ரல் 25ம் தேதி தேர்தல் நடக்கிறது. டெல்லியில் உள்ள சீக்கிய குருத்வாரா கமிட்டி மிகவும் பிரபலமானது. இந்த கமிட்டிக்கான நிர்வாக தேர்தல் ஏப்ரல் 25ம் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பு நேற்ற வெளியானது. இதை குருத்வாரா தேர்தல் பிரிவு இயக்குனர் நரேந்தர்சிங் வெளியிட்டார். இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் ஏப்ரல் 7ல் மனுத்தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 8ல் மனு பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 10ம் தேதி கடைசி நாள். ஏப்ரல் 25ல் வாக்குப்பதிவு நடைபெறும். ஏப்ரல் 28ல் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது….
The post டெல்லி குருத்வாராவுக்கு ஏப்ரல் 25ல் தேர்தல் appeared first on Dinakaran.