×

ஆனந்த் டெல்டும்டே கைது: சிந்தனையாளர்களுக்கு எதிரான தாக்குதல்


சென்னை: சிந்தனையாளர் ஆனந்த் டெல்டும்டேவை  உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: உலகறிந்த சிந்தனையாளரான ஆனந்த் டெல்டும்டே நேற்று அதிகாலை மும்பை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பிப்ரவரி 11ம் தேதி வரை அவரை கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் நேற்று  மகாராஷ்டிரா போலீஸ் அவரை கைது செய்திருக்கிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். மத்திய அரசு உடனே இதில் தலையிட்டு அவர்மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்யவும், அவரை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுதந்திர இந்தியாவில் சிந்தனையாளர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய தாக்குதலாக தற்போதைய மகாராஷ்டிர பாஜ அரசின் இந்த தாக்குதலே அமைந்துள்ளது. உலக அளவில் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், சிந்தனையாளர்களும் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இவற்றை கருத்தில் கொண்டு இந்தியாவின் முதன்மையான எதிர்க்கட்சியாக விளங்கிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் ஆனந்த் டெல்டும்டேவை விடுதலை செய்ய வேண்டும் என மகாராஷ்டிர பாஜ அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்த வேண்டும்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Anand Deltande ,thinkers , Anand Deltande, arrest, thinker, attack
× RELATED தேர்தல் தோல்வி பயத்தில் மோடியும்...