×

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் தவறி விழுந்து உயிரிழந்த அர்ச்சகர் வங்கி கணக்கில் 17 லட்சம் செலுத்திய பக்தர்கள்

நாமக்கல்: நாமக்கல் கோட்டை சாலையை சேர்ந்தவர் வெங்கடேசன் பட்டாச்சாரியார். இவர் சேலம் சாலையில் உள்ள தனியார் நூற்பாலையில், உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 27ம் தேதி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றியபோது, எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். தலையில் அடிபட்டு படுகாயமடைந்த அவர் நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 28ம் தேதி இரவு இறந்தார். அர்ச்சகர் வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரது சகோதரர் கிருஷ்ணமூர்த்தி, சிகிச்சைக்கு பணம் வேண்டி, வங்கி கணக்கையும், செல்போன் எண்ணையும் சமூக வலைதளத்தில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து இந்தியா முழுவதும் உள்ள ஆஞ்நேய பக்தர்கள் 17 லட்சத்தை அவரது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் வெங்கடேசனின் சகோதர் நாகராஜன் கூறுகையில்,  ஆஞ்நேயருக்கு பணிவிடை செய்தபோது என்னுடைய சகோதரர் தவறி விழுந்து இறந்து விட்டார். சிகிச்சைக்காக மற்றொரு சகோதரரான கிருஷ்ணமூர்த்தியின் வங்கி கணக்கையும், செல் நம்பரையும் யாரோ தவறுதலாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இதனை நம்பி, அவரது வங்கி கணக்கில் பலர் 17 லட்சம் வரை செலுத்தியுள்ளனர். யார், யார் பணம் செலுத்தினார்களோ, அவர்களது வங்கி கணக்கிற்கு திரும்ப அனுப்பி விடும்படி அந்த வங்கியின் மேலாளரிடம் கடிதம் தந்துள்ளோம். பணம் அனுப்பிய அனைவருக்கும் நன்றி. என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pilgrims ,bank ,Archangel ,Namakkal Anjaneyar , Namakkal Anjaneya Temple, devotees
× RELATED விதிகளை மீறிய வங்கிகளுக்கு அபராதம் விதித்து RBI நடவடிக்கை!!