×

வங்கி நடத்தை விதியை மீறினார் சாந்தா கோச்சார்: ஸ்ரீகிருஷ்ணா குழு அறிக்கை

புதுடெல்லி:  ஐசிஐசிஐ வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சாந்தா கோச்சார். இவர் பதவியில் இருந்தபோது, ஐசிஐசிஐ வங்கி  மூலம் வீடியோ கான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கப்பட்டது.  சாந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனத்தில் வீடியோகான் பல கோடி ரூபாய் முதலீடு செய்ததற்கு கைமாறாக முறைகேடாக இந்த கடன் வழங்கியதாக குற்றச்சாட்டு குழுந்தது. இதுதொடர்பாக சாந்தாகோச்சார், தீபக்கோச்சார், வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இதற்கிடையில், ஐசிஐசிஐ வங்கி அமைத்த, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா குழு நேற்று அறிக்கை சமர்பித்தது. அதில் சாந்தாகோச்சார் ஆண்டு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்காமல் கடமை தவறியுள்ளார். வங்கி நடத்தை விதி மீறி அவர் செயல்பட்டுள்ளார் என கூறியுள்ளது. இதை தொடர்ந்து, சாந்தாகோச்சார் ராஜினாமா, பதவி நீக்கம் செய்ததாக கருதப்படும் என வங்கி தெரிவித்துள்ளது. 2009 ஏப்ரல் முதல் 2018 மார்ச் வரை அவருக்கு அளித்த போனஸ் பலன்கள் அனைத்தையும் திரும்ப பெறவும் வங்கி முடிவு செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chanda Kochar, Srikrishna Group
× RELATED ஏப்-27: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.