×

தி.மு.க ஆட்சி அமையும் வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பொறுமை காக்க வேண்டும்; மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மாணவர்கள் மற்றும் மக்கள் நலன் கருதி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தி.மு.க ஆட்சி அமையும் வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பொறுமை காக்க வேண்டும் என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் போராடும் ஆசிரியர்களை அழைத்து பேசுவதற்கனா அக்கறையோ, பரிவோ முதலமைச்சர் எடப்பாடிக்கு இல்லை என்று குற்றம் சாட்டினார்.

நியாயமான உணர்வுகளை அடக்குமுறை மூலம் ஒடுக்கிவிட அரசு முயற்சி செய்வதாக குற்றம் சாட்டிய ஸ்டாலின், ஹிட்லர் பாணியில் முதல்வர் செயல்படுவதாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், ஜன.22 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பணிகள் முடங்கின.

இந்நிலையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பாவிட்டால் அப்பணியிடங்கள் காலிப்பணியிடமாக அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்தது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது என தமிழக அரசு மிரட்டியதை தனது அறிக்கையில் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே அதிமுக அரசிடம் இருந்து எவ்வித நீதியையும், நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின்,  மாணவர்கள் மற்றும் மக்கள் நலன் கருதி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,servants ,teachers ,patient ,MK Stalin , Jakto ji struggle, telangan government, AIADMK, DMK, mkststin, teachers, civil servants
× RELATED 1.73 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை...