×

கட்டுமான தொழிலாளர்கள் தங்கும் ஓய்வறைக்கு ஒரு நாள் கட்டணம் ரூ.20: அரசு அறிவிப்பு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1000 தொழிலாளர்கள் ஓய்வு எடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அறைகளை பயன்படுத்த நாள் ஒன்று ரூ.20 கட்டணம் நிர்ணயம் செய்து கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது. கட்டுமானப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான தங்கும் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கும் திட்டத்தின் கீழ் சென்னை மற்றும் அதன் புறர் பகுதிகளில் 5 இடங்களில் 1000 தொழிலாளர்கள் தங்கும் வகையிலும், திருச்சி,சேலம், மதுரை மற்றும் கோயம்புத்துார் ஆகிய மாவட்டங்களில் தலா 500 ெதாழிலாளர்கள் தாங்கும் வகையிலும் ஓய்வு அறைகளை அமைக்க ரூ.106 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் படபை சாலையில் உள்ள எழிச்சூர் மற்றும் ஓஎம்ஆர் சாலையில் உள்ள தையூர் ஆகிய இரண்டு கிராமங்களில் 1000  தொழிலாளர்கள் தங்கும் வகையிலான அறைகள் கட்டி முடிக்கப்பட்டன. இந்நிலையில் இந்த அறைகளை பயன்படுத்த நாள் ஒன்றுக்கு ரூ.20 கட்டணம் நிர்ணயம் செய்து தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி அந்தப் பகுதியில் 30 கி.மீ சுற்றளவில் பணிபுரியும் தொழிலாளர்கள் இந்த ஓய்வு அறைகளை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு  காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெருவில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Construction worker, dressing room, Government
× RELATED நெரிசல் மிகுந்த ராயப்பேட்ைட...