×

பீட்டர்ஸ்பர்க் ஓபன் : ஜூலியா முன்னேற்றம்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: ரஷ்யாவில் நடைபெறும் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, ஜெர்மனி வீராங்கனை ஜூலீயா கோயர்ஜஸ் தகுதி பெற்றார்.முதல் சுற்றில் கிரீஸ் நாட்டின் மரியா சக்கரியுடன் நேற்று மோதிய ஜூலியா 6-2, 7-5 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 12 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. முன்னணி வீராங்கனை மரியா ஷரபோவா (ரஷ்யா) தனது முதல் சுற்றில் 6-0, 6-4 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் டாரியா காவ்ரிலோவாவை வீழ்த்தினார்.டோனா வேகிச் (குரோஷியா), தெரசா மார்டின்கோவா (செக்.), வெரோனிகா குதெர்மதோவா (ரஷ்யா) ஆகியோரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Julia , Petersburg Open Tennis, Women's Singles Division, Julia Goyires
× RELATED பூட்டிய வீட்டில் நகை பணம் கொள்ளை