×

பூட்டிய வீட்டில் நகை பணம் கொள்ளை

ஆவடி: பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் ஜூலியா யுவராணி. இவர், மகளிர் சுய உதவிக் குழு தலைவராக உள்ளார். இந்நிலையில், நேற்று மகளிர் குழு பணி தொடர்பாக, ஆவடி மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது பூட்டியிருந்த வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, பீரோ இருந்த அறைக்கு சென்றார். அப்போது, பீரோவில் இருந்த 10 சவரன், ரூ2 லட்சம் ரொக்கம் கொள்ளைபோனது தெரியவந்தது. இதுகுறித்து, அவர் பட்டாபிராம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களுடன் போலீசார் விரைந்து வந்தனர். இதையடுத்து, கைரேகை நிபுணர்கள் வீடு, கதவுகள் மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவு மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். …

The post பூட்டிய வீட்டில் நகை பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Awadi ,Julia Yuwarani ,Battapram ,Women's Self-Help Group ,Dinakaran ,
× RELATED அரசு கலைக்கல்லூரி சாலையில் வாகனங்கள்...