×

தக்கலை அருகே ரப்பர் ஷீட் குடோனில் தீவிபத்து: ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ரப்பர் ஷீட் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தக்கலை அருகே உள்ள முட்டைக்காடு பகுதியில் சோமன் என்பவருக்கு சொந்தமான ரப்பர் ஷீட் குடோன் இயங்கி வருகிறது. தினமும் காலை 11 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 5 மணிக்கு மூடப்படும் இந்த ஆலையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு ரப்பர் பால் மூலம் தயாரிக்கப்படும் ரப்பர் ஷீட்டுகள் வெளியூர்களுக்கு அனுப்பப்படுவது வழக்கமாகும். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக குடோனில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது.

தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ரப்பர் ஷீட்டுகள் தீப்பிடித்து எரிந்துள்ளன. ரப்பர் ஷீட்டுகள் தயாரிப்பில் அமிலங்கள் அதிமாக பயன்படுவதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டுள்ளது. இதையடுத்து தக்கலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாத காரணத்தால் குலசேகரம் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சுமார் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த தீவிபத்தில், சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமாகியிருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thagalai ,Kudoni , Thuckalay, rubber, Godown, fire, Kumari
× RELATED திருவல்லிக்கேணி குடோனில் பதுக்கிய 10 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்