×

பிரமாண்டத்திற்கு வந்த வருமான வரி சோதனை... பாடி, தி.நகர் உள்ளிட்ட 72 இடங்களில் சோதனை

சென்னை: சென்னை மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட 74 இடங்களில் இன்று காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜீ ஸ்கொயர், லோட்டஸ் குரூப், ரேவதி குழுமம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் பெரம்பூர், பாடி, தி.நகர், திருவான்மியூர், பாலவாக்கம் உள்ளிட்ட 72 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதே கோயம்புத்தூரில் 2 இடங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெறும் பிரமாண்டம் கடையும், ரேவதி ஸ்டோர்சும் நெருங்கிய உறவினர்கள் ஆவார். கடந்த இரண்டு ஆண்டுக்கு பின் குறிப்பாக ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பின்பாக முறையான கணக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை என்று தெரிகிறது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பின் தாக்கல் செய்த கணக்குகளில முரண்பாடுகள் இருப்பதாக வந்த தகலையடுத்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வருமான வரி சோதனை சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது.  

வீடு மற்றும் அலுவலகங்ளில் ரெய்டு

சென்னை, கோவை உள்பட பல முக்கிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் பாடி, தியாகராயர் நகரில் பிரம்மாண்டமாய் என்ற பெயரில் உள்ள கடையில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் பிரம்மாண்டம் என்ற பெயரில் கடை நடத்தும் உரிமையாளர், மற்றும் உறவினர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

விற்பனை நிறுத்தம்

வருமான வரி சோதனையால் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. விற்பனை நிறுத்தப்பட்டதால் பொருட்கள் வாங்க சென்ற மக்கள் திரும்பிச் சென்றனர்.

பெரம்பூர் ரேவதி குழுமத்தில் சோதனை


சென்னை பெரம்பூரில் உள்ள ரேவதி டெக்ஸ்டைல்ஸ், ரேவதி சூப்பர் மார்க்கெட், மற்றும் ரேவதி ஜுவல்லரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் வந்ததை அடுத்து சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : grand finale ,places ,Nagar ,Tadi , Saravana Stores, Income Tax Department, ID raid, Revathi Group, Chennai, Coimbatore
× RELATED தமிழ்நாட்டில் நேற்று 13 இடங்களில்...