×

வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை: சிசிடிவி கோமராவில் பதிவான 3 பேருக்கு வலை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே எம்ஜிஆர்  நகர், ராமானுஜர் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (62). மனைவி துரைராணி (56). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூர்களில் கணவன் வசித்து வருகின்றனர். தற்போது மூர்த்தி, துரைராணி தனியாக எம்ஜிஆர் நகரில் வசிக்கின்றனர். இந்நிலையில், கடந்த 29ம் தேதி மூர்த்தி, பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு மனைவியுடன் சென்றார். நேற்று முன்தினம் வீடு திரும்பினர். அப்போது,  வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து, அதில இருந்த ₹53 ஆயிரம், 4 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. தகவலறிந்து, ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, விசாரித்தனர். அப்போது, சம்பவம் நடந்த வீட்டின் அருகில் உள்ள மற்றொரு வீட்டின் பூட்டை உடைத்து  கொள்ளை முயற்சி நடந்தது தெரியவந்தது. ஆனால், அந்த வீட்டில் பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை. மேலும், அந்த தெருவில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில், மர்மநபர்கள் 3 பேர் கொள்ளையடிக்க வந்தது பதிவாகி இருந்தது. அதில் 3 வாலிபர்கள் முககவசம் அணிந்து  கொள்ளையடிப்பதும், அதில் ஒருவன் சாலையில் நோட்டமிட்டு இருப்பதும், 2 பேர் கதவை உடைத்து உள்ளே சென்று வெளியே வருவதும் பதிவாகி இருந்தது. அவர்களுக்கு 15 முதல் 20 வயது இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.வழக்குகள் பதிவதில்லைஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. பெரும்பாலான குடும்பத்தினர் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து, இங்கு வாடகை வீட்டில் குடியேறியுள்ளனர். சமீப காலமாக, இப்பகுதில் அடிக்கடி கொள்ளை, வழிப்பறி, பைக் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதுதொடர்பான புகார்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை. மேலும், போலீசார் நகர்களுக்கு உள்ளே ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. இதனால் குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது என ஸ்ரீபெரும்புதூர் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்….

The post வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை: சிசிடிவி கோமராவில் பதிவான 3 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : CCTV Comera ,Murthy ,Ramanujar Street, MGR Nagar ,Sriperudur ,Thurirani ,CCTV Komera ,
× RELATED பத்திரப்பதிவு முடிந்த நாளிலேயே...