×

வௌ்ளப்பள்ளம் உப்பனாற்றில் இரும்பு பாலம் உடையும் அபாயம் : இரு கிராமங்கள் துண்டாகும் அவலம்

சீர்காழி: சீர்காழி அருகே வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் இரும்பு பாலம் உடையும் அபாயம் உள்ளது. இதனால் இரு கிராமங்கள் துண்டிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. சீர்காழி அருகே வௌ்ளப்பள்ளம் கிராமத்திற்கும், புதுத்துறை கிராமத்திற்கும் இடையே உப்பனாற்றில் மூங்கில் மரத்தினால் நடைபாலம் இருந்து வந்தது. இந்த பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மழையின்போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் இரு கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சீர்காழி எம்.எல்.ஏ பாரதி முயற்சியால் ரூ.15 லட்சம் செலவில் இரும்பு நடைப்பாலம் அமைக்கப்பட்டது.

இந்த நடைப்பாலம் கடந்தசில மாதங்களுக்கு முன் 2 இடங்களில் பழுதடைந்து கைப்பிடி கம்பிகள் உடைந்து கீழே விழுந்துள்ளனர். இதனால் இப்பாலத்தை கடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். இதனால் அசாம்வித சம்பவங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்து வருகிறது. வௌ்ளப்பள்ளத்திற்கும், புதுத்துறைக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள கம்பி பாலம் துண்டிக்கப்பட்டால் இரு கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்படும்.

வௌ்ளப்பள்ளம் கிராமத்தில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வரவேண்டுமானால் உப்பனாற்றில் அமைக்கப்பட்டுள்ள கம்பி பாலத்தை கடந்துதான் வரவேண்டும். பாலம் பழுது ஏற்பட்டால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படும். எனவே பொதுமக்களின் நலன் கருதி வௌ்ளப்பள்ளம் புதுத்துறைக்கு இடையே அமைக்கப்பட்டு பழுதடைந்திருக்கும் கம்பி பாலத்தை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vellapallam Iron bridge ,villages , Vallapallam, Iron Bridge, Villages
× RELATED மரக்காணம் பகுதியில் தாய்லாந்து நாட்டு மரவள்ளி பயிரிட விவசாயிகள் ஆர்வம்