×

அமெரிக்காவுக்கு எதிராக கருத்து சீனாவுக்கான கனடா தூதர் அதிரடி பதவி நீக்கம்: பிரதமர் ட்ரூடோ நடவடிக்கை

டொரண்டோ: அமெரிக்காவுக்கு எதிராக கருத்து கூறிய சீனாவுக்கான கனடா தூதர் ஜான் மெக்கல்லம் பதவி நீக்கம்  செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து  தெரிவித்ததை அடுத்து அவர் மீது இந்த அதிரடி நடவடிக்கை  எடுக்கப்பட்டதாகவும், துணை தூதராக இருந்து வந்த ஜிம் நிக்கல் தலைமை தூதராக  செயல்படுவார் என்றும் கனடா  பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.சீனாவை சேர்ந்த பன்னாட்டுத் தொலைத் தொடர்பு  நிறுவனமான ஹுவாவெ தொழில்நுட்ப நிறுவனத்தின் அதிபர் ரென் ஜெங்பெய்யின்  மகள் மெங் வான்ஜூ. இவர் அந்நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக உள்ளார்.  இவர்  கடந்த டிசம்பர் 1ம் தேதி கனடாவில் வான்கூவர் நகரில் கைது  செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கை, மனித உரிமை மீறல் என்று  சீனா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. வடகொரியா, ஈரான் மீது அமெரிக்கா  விதித்த பொருளாதார தடைகளை, ஹுவாவெ நிறுவனம் மீறியதாக எழுந்த புகாரின்  அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு   இணங்க கனடா கைது நடவடிக்கை மேற்கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

 இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக,  போதைப் பொருள் கடத்தியதாக கனடாவை சேர்ந்த இருவரை சீனா கைது செய்து  சிறையில் அடைத்துள்ளது. இதன் மூலம் மெங் வான்ஜூவை விடுதலை செய்ய கனடாவை சீனா   மறைமுகமாக நிர்ப்பந்தித்தது.
இந்நிலையில், டொரண்டோவில்  செயல்படும் சீன ஊடகத்துக்கு பேட்டியளித்த, சீனாவுக்கான கனடா தூதர் ஜான் மெக்கல்லம், “மெங் வான்ஜூவை  அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது நல்லதல்ல. இது சீனாவுடனான  அமெரிக்காவின்  வர்த்தகப் போருக்கு ஆதரவாக, எடுக்கப்பட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.  வான்ஜூவை நாடு கடத்தாவிட்டால், சீனாவில் கைது செய்யப்பட்டுள்ள கனடா  நாட்டினர் இருவரையும் சீனா விடுக்க  வாய்ப்புள்ளது” என்று பேசினார்.  அதன்பின்னர் கடந்த வியாழக்கிழமை தான் தவறாக பேசிவிட்டதாக மற்றொரு  பேட்டியில் மெக்கல்லம் தெரிவித்தார். இதையடுத்து ட்ரூடோ  வெளியிட்ட அறிக்கையில், “மெககல்லம் பதவி  நீக்கம் செய்யப்படுகிறார். இதுவரை பீஜிங்கில் உள்ள  கனடா தூதரகத்தில் துணை தூதராக செயல்பட்டு வந்த ஜிம் நிக்கல் இனிமேல் தலைமை  தூதரக அதிகாரியாக பணியாற்றுவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜாமீனில்  வெளிவந்துள்ள மெங், அமெரிக்கா கொண்டு செல்லப்படுவதற்காக காத்திருக்கிறார்.  அமெரிக்க அரசும் அவரை நாடு கடத்துவதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கும்  பணியில் மும்மூரமாக  உள்ளது. சீனாவின் மிக முக்கியமான பன்னாட்டு நிறுவனமாக  விளங்கும் ஹுவாவெ நிறுவனத்துக்கும் சீன ராணுவத்துக்கும் நெருங்கிய  தொடர்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ambassador ,Canada ,Trudo ,China ,US , Opinion against the United States Canada for China Ambassador Strike dismissed: Prime Minister Trudo's move
× RELATED பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை