- அணுமின் நிலைய நிலா குழு
- விஷிகா
- பனையூர் எம்.பாபு
- திருக்கழுக்கன்றம்
- விடுதலை புலிகள் கட்சி
- பனாயூர்
- நிலா கமிட்டி
- கல்பாக்கம்
திருக்கழுக்கன்றம்: கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் ஏற்படுத்தப்பட்ட நிலா கமிட்டியை ரத்து செய்வேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பனையூர் பாபு உறுதியளித்தார். செய்யூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பனையூர் மு.பாபு, பூந்தண்டலம், பெருமாள்சேரி, வெங்கப்பாக்கம், ஆரம்பாக்கம், நத்தமேடு, அமிஞ்சிகரை, வீராபுரம், பெரிய காட்டுப்பாக்கம், குண்ணவாக்கம், நடுவக்கரை, பெரும்பேடு, பாண்டூர், கிளாப்பாக்கம், காட்டூர், வழுவதூர், வல்லிபுரம், விளாகம் உள்பட பல்வேறு கிராமங்களுக்கு சென்று, அங்குள்ள மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். அவருக்கு, பொதுமக்களும், கூட்டணி கட்சியினரும் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பளித்தனர்.பெரிய காட்டுப்பாக்கம் கிராமத்துக்கு வேட்பாளர், அங்கு வயல்வெளியில் வேர்க்கடலை செடிகள் பிடுங்கி கொண்டு இருந்த விவசாயிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர், விவசாயிகளோடு சேர்ந்து விவசாய வேலைகளை செய்து அசத்தினார். தொடர்ந்து, வேட்பாளர் பனையூர் மு.பாபு பேசுகையில், ‘கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகத்தால் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் நிலா கமிட்டி என்ற கமிட்டி அமைக்கப்பட்டது. அதனால், பல ஆண்டுகளாக வாழும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதையொட்டி, அந்த நிலா கமிட்டியை முற்றிலுமாக ரத்து செய்வேன். மேலும், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ளூர், சுற்றுப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தருவேன் என்றார். பிரசாரத்தின்போது, திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் எடையாத்தூர் சரவணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக், ஒன்றிய பொருளாளர் பாபு, ஒன்றிய துணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, வெங்கப்பாக்கம் பாபு, நிர்வாகிகள் கயல் மாரிமுத்து, தாமோதரன், காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் சி.ஆர்.பெருமாள், செய்யூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ஏழுமலை, திருக்கழுக்குன்றம் வட்டார காங்கிரஸ் தலைவர் சுதாகர், மதிமுக ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் சூ.க.ஆதவன், திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய செயலாளர் வாயலூர் மணவாளன், நிர்வாகிகள் ரவி (எ) ஆதவன், தலித் தயாளன், நத்தமேடு ஏழுமலை, குணா, சாபீர், ஜெயகர் உட்பட பலர் இருந்தனர்….
The post அணுமின் நிலைய நிலா கமிட்டியை ரத்து செய்வேன்: விசிக வேட்பாளர் பனையூர் மு.பாபு உறுதி appeared first on Dinakaran.