×

ஐஎஸ்எல் கால்பந்து நெருக்கடியில் சென்னையின் எப்சி

கவுகாத்தி: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில்  கடைசி இடத்தில் பின்தங்கியுள்ள சென்னை எப்சி அணி, தனது 13வது லீக் ஆட்டத்தில் இன்று நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எப்சி அணியுடன் மோதுகிறது. நடப்பு சாம்பியனான சென்னை அணி, நடப்பு சீசனில் விளையாடிய 12 போட்டிகளில்  ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. 2 டிரா, 9 தோல்வியுடன் 5 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. வெற்றிக்காக தலைமை பயிற்சியாளர் ஜான் கிரிகோரி மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை. அணியில் புதிதாக இடம் பெற்ற  கார்லோஸ் சலோம்,  யெலி சபா மட்டுமல்ல பழைய வீரர் ஜேஜேவும்  எதிர்பார்த்த அளவுக்கு ஜொலிக்கவில்லை.

உள்ளூர் ஆட்டக்காரர்கள் யாரும் இடம் பெறாததால் ரசிகர்களின் ஆதரவும் இந்தமுறை குறைந்து விட்டது. இந்நிலையில் கேரள அணியில் விளையாடிய 2 வீரர்களை  இந்த சீசனுக்காக மட்டும் சென்னை அணி கடன் வாங்கியுள்ளது. கேரள அணியின் முன்கள ஆட்டக்காரர்  சி.கே.வினீத் (30), நடுகள ஆட்டக்காரர்  ஹாலிசரண் நார்ஜாரி ஆகியோர் இதுவரை கேரள அணிக்காக விளையாடினர். இனி சென்னைக்காக விளையாட உள்ளனர்.
தொடர்ச்சியாக 6 லீக் ஆட்டங்களிலும் வென்றால் கூட, அரை இறுதிக்கு முன்னேற மற்ற அணிகளின் செயல்பாட்டை எதிர்பார்த்து ஏக்கத்துடன் காத்திருக்க வேண்டிய நிலையிலேயே சென்னை அணி உள்ளது.

கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள சென்னையின் எப்சி, கவுகாத்தியில் இன்று நடைபெறும் போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எப்சி அணியை சந்திக்கிறது. ஏற்கனவே இந்த அணிகள் சென்னையில் மோதிய போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : HSBC ,football crisis ,Chennai , Isl football, Chennai FC
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...