×

தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்திய விவகாரம் : ஓபிஎஸ், தலைமைச் செயலாளர் மீது வழக்கு தொடர அனுமதி கோரி மனு

சென்னை : தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்திய விவகாரத்தில் ஓபிஎஸ், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது வழக்கு தொடர அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் பூஜை, யாகம் போன்றவை நடத்தக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கடந்த 20ம் தேதி தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்திய துணை முதல்வர் ஓபிஎஸ் மீது வழக்கு தொடர அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன் சார்பில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து பரீசிலித்து அரசு தலைமை வழக்கறிஞர் முடிவு செய்வார் என கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Yagya ,Secretariat ,OPS ,chief secretary , Chief Secretariat, Yaga, OBS, Chief Secretary, High Court
× RELATED என்னையும் சித்தராமையாவையும் அழிக்க...