×

அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் அறங்காவலர் குழு அமைப்பது தொடர்பாக அறிவிப்பாணை வெளியிட உத்தரவு

மதுரை : அறங்காவலர் குழு அமைப்பது தொடர்பாக அறிவிப்பாணை வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கோயில்களில் அறங்காவலர் இல்லாததால் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கு கடந்து வந்த பாதை


தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையை சேர்ந்த காந்திமதிநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஏராளமான கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் நிர்வாகம் பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காக அறங்காவலர் குழுவை அமைக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அறங்காவலர் குழு நியமிக்கப்படவில்லை. தக்கார் மட்டுமே உள்ளனர். இதனால் கோயில்களில் அடிப்படை வசதிகளை செய்வது, புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் வெளிப்படைத்தன்மை இல்லாத சூழல் உள்ளது.

அறங்காவலர் குழு இல்லாததால் தான் மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து, திருச்செந்தூர் கோயிலின் வெளிப்பிரகார மண்டம் இடிந்தது போன்ற பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அறங்காவலர் குழு இருந்திருந்தால் முன்கூட்டியே தேவையான பாதுகாப்பு வசதிகள், அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டிருக்கும். எனவே நீதிமன்றம் தலையிட்டு அனைத்து அறநிலையத்துறை கோயில்களில் அறங்காவலர் குழுவை நியமித்து, அந்த குழுவில் உரிய இடஒதுக்கீடு அடிப்படையில் பெண்கள், தாழ்த்தப்பட்டோரை நியமிக்க உத்தரவிட வேண்டும். .இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மேலும் தக்கார் என்ற ஒரு நபரின் கீழ் கோயில் நிர்வாகம் செயல்படுவதாகவும் மனுவில் புகார் கூறப்படுகிறது. தக்கார் பதவி ஊழல், முறைகேடுகளுக்காக பயன்படுத்துப்படுவதாக மனுதாரர் குற்றம் சாட்டி இருந்தார்.   

அறங்காவலர் குழு அமைப்பது தொடர்பாக அறிவிப்பாணை வெளியிட உத்தரவு

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் அறங்காவலர் குழு அமைப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர்கள் ஒரு மாதத்தில் அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : announcement ,Trustee Committee ,Department of Araliyar ,temples , Trustee, Group, Temple, Charity, Commissioner, Reservation
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...