×

சோழவந்தான் அருகே திருவேடகத்தில் தெப்பத் திருவிழா: பக்தர்கள் பங்கேற்பு

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் கிராமத்தில் நேற்று பிரம்ம தீர்த்த தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவேடகம் கிராமத்தில் சைவ, வைணவ வரலாற்றுடன் இணைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஏழவார் குழலி சமேத ஏடகநாதர் திருக்கோவில் உள்ளது. சிறப்பு மிகு கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு தெப்பத்திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை அம்பாளுடன் சுவாமி திருக்கோவிலில் இருந்து பிரம்ம தீர்த்த தெப்பத்திற்கு அழைத்து வரப்பட்டார். மாலை உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது.

மேலும் தெப்பம் முழுதும் பக்தர்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர்.இரவு 8 மணியளவில் மின் அலங்காரத்தில் ஏழவார்குழலி அம்மன் சமேதமாக ஏடகநாதர் பிரம்ம தீர்த்த தெப்பத்தை சுற்றி ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார். ஊர்வலத்தில் முப்பெரும் தேவியர், காளி, கருப்பணசுவாமி வேடமணிந்த பக்தர்கள் நடனமாடியபடி வந்தனர். பின்னர் நான்கு ரத வீதியிலும் வலம் வந்த சுவாமியையும், அம்பாளையும் வீடுகள் தோறும் அபிஷேக ஆராதனைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : devotee festival ,Thiruvatham ,Cholavananda , devotee festival, Thiruvatham,Cholavananda, Devotees participation
× RELATED சோழவந்தான் அருகே கால்வாய் கரையில்...