×

டிடிஎச் மற்றும் கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய செயலி அறிமுகம்: டிராய் அறிவிப்பு

டெல்லி: டிடிஎச் மற்றும் கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய செயலியை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிமுகப்படுத்தியுள்ளது. டிராய் உருவாக்கியிருக்கும் பிரத்யேக வலைத்தளத்தில் 5 வழிமுறைகளை கடந்து அவரவர் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் இந்த சேவையை கொண்டு விரும்பிய சேனல்களுக்கான கட்டணங்களையும் அறிந்து கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கேபிள் டிவி ஒளிபரப்பு தொடர்பாக டிராய் நிறுவனம் புதிய கொள்கை விதிமுறையை அறிவித்தது.

இதன்படி, கேபிள் டிவி வழங்கும் அனைத்து சேனல்களை பார்ப்பதற்கு பதிலாக, குறிப்பிட்ட சேனலை மட்டும் பணம் கொடுத்து பொதுமக்கள் பார்த்தால் போதும் என கூறப்பட்டிருந்தது. இந்த புதிய விதிமுறை தங்களை பாதிப்பதாகவும், இதன்மூலம் பெரிய நிறுவனங்கள் மட்டுமே பலனடைய முடியும் என்றும் கேபிள்டிவி ஆப்பரேட்டர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் புதிய கேபிள் கட்டண முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று கேபிள் டி.வி. ஒளிபரப்பு நிறுத்தப்படும் என்று கேபிள் டி.வி. பொதுநல சங்கம் அறிவித்தது.

மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் முழு ஒளிபரப்பு நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது. மேலும் மத்திய அரசு இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால் பொதுமக்கள் மற்றும் தொழில் சங்கங்களை இணைத்து பிப் 10-ம் தேதி சென்னையில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்தி முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கேபிள் டி.வி. பொதுநல சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : customers ,Troy , DTH,Cable TV,customers,new App,channels,TRAI,notification
× RELATED போலி ஆவணங்கள் தயாரித்து 3...