×

ஓய்வு பெற்ற நீதிபதி அதிருப்தி டிச.12ல் கொலீஜியம் எடுத்த முடிவுகளை வெளியிடாதது ஏன்?

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, கடந்த டிசம்பர் 12ம் தேதி கொலீஜியம் எடுத்த முடிவுகளை வெளியிடாததற்கு ஓய்வு பெற்ற நீதிபதி மதன் பி.லோகூர் அதிருப்தி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் தேர்வுக்குழுவான கொலீஜியம் கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி ஆலோசனை நடத்தியது. அப்போது, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பிரதீப் நந்திரஜோக், ராஜேந்திர மேனன் ஆகியோரின் பெயரை பரிந்துரைக்க முடிவெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 5 நீதிபதிகள் அடங்கிய கொலீஜியத்தில் இடம் பெற்றிருந்த நீதிபதி மதன் பி.லோகூர் டிசம்பர் 31ம் தேதி ஓய்வு பெற்றார்.

பின்னர், மீண்டும் கூடிய கொலீஜியம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கண்ணா ஆகியோரை பரிந்துரைத்தது. இந்த திடீர் மாற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதன் லோகூர் ஓய்வு பெற்றுவிட்டார் என்பதற்காக கொலீஜியம் மீண்டும் கூடியது ஏன்?, டிசம்பர் 12ம் தேதி எடுத்த முடிவு ஏன் பொது வெளியில் வெளியிடப்படவில்லை என்ற சந்தேகங்கள் கிளப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில், நீதித்துறை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பங்கேற்ற ஓய்வு பெற்ற நீதிபதி மதன் லோகூர் பேசுகையில், ‘‘கொலீஜியத்தில் ஆலோசனைகள் ரகசியம் காக்கப்பட வேண்டிய அதே சமயத்தில் நம்பிக்கைக்கு உகந்ததாக இருக்க வேண்டியதும் அவசியம். எனவே, நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலீஜியத்தில் நடைமுறையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம். டிச.12 கொலீஜியம் முடிவுகளை உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடாதது அதிருப்தி அளிக்கிறது’’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : judge ,government ,Colombian , Retired Judge, Col.
× RELATED கெஜ்ரிவால் குற்றம் செய்வதை வழக்கமாக...