×

பார்வையாளர்களை கவர்ந்தது கண்காட்சி சென்னையில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு கம்பெனி

சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதையொட்டி, நந்தனம் வர்த்தக மையத்தில் இரண்டு நாள் கண்காட்சி நடைபெற்றது. இதில் 250 ஸ்டால்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதில், வெளிநாட்டு கார் கம்பெனிகளும் இடம்பெற்று இருந்தது. ஹூன்டாய் நிறுவனம் சார்பில் பேட்டரியால் இயங்கும் கார் பார்வையாளர்களை கவர்ந்தது. இந்த கண்காட்சியில் பிளாஸ்டிக்  தடைக்கு மாற்று பொருட்கள் அதிகளவில் இடம்பெற்று இருந்தது. இதுபற்றி அந்நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஹூண்டாய் நிறுவனம் சார்பில் 5 லட்சம் முதல் 35 லட்சம் மதிப்பிலான கார்கள் சென்னையில் தயாரித்து விற்பனை செய்கிறோம்.

தற்போது தமிழ்நாட்டில் முதன்முதலாக சென்னையில் 7000 கோடி முதலீட்டில் எலக்ட்ரிக் கார் தயாரிக்க உள்ளோம். ஒப்பந்தம் இன்று மாநாட்டில் கையெழுத்தாக உள்ளது. இந்த கார் பேட்டரி மூலம் 6 மணி நேரம் பயணம் செய்ய முடியும். கூடுதலாக ஒரு பேட்டரி வழங்கப்படும். 150 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். 7 நொடியில் 100 கி.மீ. வேகத்தை எட்ட முடியும். சத்தம் வராது. சுற்றுசுழல் மாசு ஏற்படாது. இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு வரும்’’ என்றார்.

1.80 லட்சத்தில் ‘எலக்ட்ரிக் பைக்’
எலக்ட்ரிக் பைக் தயாரித்துள்ள சென்னை கார்த்திகேயன் கூறுகையில், ‘‘250 கிலோ எடையில் எலக்ட்ரிக் பைக் யாரித்துள்ளேன். இது அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும். 140 கி.மீ வேகம் வரை செல்ல முடியும். 2 மணி நேரம் வரை சார்ஜ் நிற்கும். இதன் விலை 1.80 லட்சம்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Exhibition ,viewers ,Chennai ,Electric Car Production Company , Visitors, exhibition, electric car in Chennai
× RELATED சென்னையில் கலைஞர் புகைப்பட கண்காட்சி 7ம் தேதி வரை நீட்டிப்பு..!!