×

ஆழியார் வனத்திலிருந்து கிராமத்தில் புகுந்த யானை : விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் வனத்திலிருந்து கிராமத்திற்கு வந்த காட்டு யானையை விரட்டும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் மற்றும் நவமலை வனத்திலிருந்து கடந்த சில வாரங்களாக யானைகள் கூட்டம் கூட்டமாக, ஆழியார் அணைக்கு தண்ணீர் குடிப்பதற்காக வருவகின்றன. இதில் ஆழியார் வனத்திலிருந்து ஒன்றை ஆண் யானை ஆழியார் அணையின் பின் பகுதி ஜூரோ பாயிண்ட் வழியாக கடந்த வாரம் இரவு நேரத்தில் சாலைக்கு வந்தது. இதையடுத்து அந்த யானையை, வனத்துறையினர் பட்டாசு வெடித்து காட்டிற்குள் விரட்டினர்.  

இந்நிலையில் நேற்று முன்தினம் ஆழியாரிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரமுள்ள பருத்தியூர் கிராமத்தில்  ஒரு தோட்டத்தில் அந்த யானை மேய்ந்துகொண்டிருப்பதை   கண்ட பொதுமக்கள்  அதிர்ச்சியடைந்தனர்.தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, தோட்ட பகுதியிலிருந்து ஊருக்குள் யானை புகுவதை தவிர்க்க, பட்டாசு வெடித்தும், தீப்பந்தத்தை காட்டியும் விரட்டும் பணியில் இரவு முழுவதும் ஈடுபட்டனர். ஆனால் அந்த ஒற்றை காட்டு யானையானது, காட்டிற்குள் செல்லாமல் அங்கேயே சுற்றி சுற்றி வந்தது.

பின் நேற்று காலையிலிருந்து வனத்துறையினர் தொடர்ந்து பட்டாசு வெடித்து யானையை காட்டிற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அந்த யானை, தோட்ட பகுதியிலிருந்து சற்று தூரமுள்ள பாறைமேட்டிற்கு சென்று மறைவான இடத்தில் நின்று கொண்டது. ஒருகட்டத்தில் அந்த யானை, வனத்துறை ஊழியர்களை எதிர்த்து விரட்டியது. அதிர்ச்சியடைந்த வனத்துறையினர், சில மணிநேரம்  யானையை விரட்டும் பணியை தவிர்த்தனர். பின் வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில், மொத்தம் 3 குழுக்களாக வனத்துறை ஊழியர்கள் பிரிந்து, மாலையில் யானையை விரட்டும் பணியில் மீண்டும் ஈடுபட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : village ,Aliyar forest , Aliyar, elephant, acrobatics
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...